Sunday, July 28, 2019

ருத்ர யாகம் - பாகம் 2


சப்த கன்னிகளுக்காக மன்மதன் என்று சற்குருவால் அழைக்கப்படவன் நீராளி மண்டபத்திற்கு சென்றான். அவனுடைய வருகையை அறிந்த ஓர் மொட்டைப் போட்ட பெண் வந்து வணங்கினாள். 

"வணக்கம் அய்யனே."
"வணக்கம் பெண்ணே. கலையுலகில் சிறந்தவராக திகழும் கலைவாணியான ராஜமாதவை சந்திக்க வேண்டும்."
"சற்று இங்கே அமருங்கள். அவரிடம் அனுமதிப் பெற்று வருகிறேன்" என்று கூறி உள்ளே சென்றாள். 

சில மணித்துளிகள் கழித்துவந்தவள் பின்னே ராஜமாத வந்துகொண்டிருந்தாள். கலைகளை அறிந்திருமையால் ஏற்பட்ட பூரணத்துவம் முகத்தில் பொழிவு தெரிந்தது. நேர்கொண்ட பார்வையும், நுனி நாசியும், கழுத்தில் பளபளத்த ருத்திராச்சை தங்க மாலையும் இருந்தன. பழமையான அரச குலத்தவள் போல மார்பில் வெள்ளைநிறக் கச்சை கையங்குளத்திற்கு சென்றது. அதில் மார் பிதுங்கிக்கொண்டிருந்தது. அதன் கீழ் சின்னதாய் தொப்பை. அதில் ஆழம் மிக்க தொப்புள். தொப்புளே இவ்வளவு ஆளமென்றால்... என நினைத்த மனதை. சீ.. அவள் ராஜமாதா என்று தடுத்தான். அவளுடைய இடையில் பஞ்சகஜ வேட்டையைப் போல வெள்ளை பாவடையை அணிந்திருந்தாள்.

"வணக்கம் ராஜமாதா
வணக்கம் ருத்ரசீலா. வந்திருக்கும் விசயத்தினை அறிவேன். தென்தீர்த்த கரைக்கு போகலாம். அந்த ஓலைக்கட்டை இந்த பெண்ணிடம் அளித்துவிட்டு என் பின்னே வா."
"வருகிறேன் தாயே" என்று பின்னால் நடந்தான். ராஜமாதாவின் பின்னப்பட்டிருந்த கூந்தல் அவளுடையப் பின்னால் பிண்டத்தில் பட்டு மாறி மாறி அசைந்துக் கொண்டிருந்தது. ராஜமாதா... ராஜமாதா என்று மனதை அடக்கிக் கொண்டான்.

தென்தீர்த்தம். 
அகண்டு விரிந்த நீர்நிலையை பளிங்குப்படிக்கட்டில் கட்டிப் போட்டிருந்தார்கள். அதன் படிக்கட்டில் இறங்கிய ராஜமாதவை, ருத்தரசீலன் தொடர்ந்தான். ஆடையைக் கலையாமல் அப்படியே குளத்தில் இறங்கினாள் ராஜமாதா. அவன் தயங்கி நின்றான்.
"வா.. ருத்தரசீலா. இத்தீர்த்தில் இறங்கி உறங்கிக் கொண்டிருக்கும் தென்தீர்த்தானை தரிசனம் செய். அவனே உனக்கு அடுத்த வழியைக் காட்டுவான். "
ருத்ரசீலன் நீருக்குள் இறங்கினான். அவனுடைய கழுத்துவரை இருந்த நீரில் பயணம் செய்ய ராஜமாதாவின் கைகளைப் பற்றினான். ருத்ரசீலனின் கைகளை இருகப்பிடித்த ராஜமாதா.. அவனை இழுத்து குளத்திற்குள் அமுக்கினாள். அதுவரை நீரில் இருந்ததை மறந்தான். தனியான உலகம் பிறந்தது. இருவரும் நன்கு சுவாசித்தார்கள். நீரில் சுவாசிப்பது எப்படி சாத்தியமாகியது என்ற நினைவே ருத்ரசீலனுக்கு இல்லை. 

தென்தீத்தான் என்று அழைக்கப்படும் லிங்கம் ஆறு அடியில் சற்று சாய்ந்து இருந்தது. லிங்கத்தின் அருகே அமர்ந்த ராஜமாதா ஏக பஞ்சாச்சர மந்திரத்தினை ஜபம் செய்யத் தொடங்கினார். ருத்ரசீலனும் அதைத் தொடங்கினான். நமசிவாய என்பது ஐந்து அட்சாரங்களில் ஒன்று. அந்த அச்சாரங்களை மாற்றியும் ஈசனை வணங்குவது உண்டு. சி எனப்படும் ஒரு எழுத்தை ஏக பஞ்சாட்சரமாக வணங்குகின்றனர். அதனை 108 முறை இருவரும் கூறி முடித்தனர். 
அதன்பின்பு ருத்ரசீலனுக்கு ஒரு சந்தேகம் வந்தது. 

"தாயே... என்ன இது இத்தனை நாட்கள் இந்த குளம் நீர் நிரம்பியது என்றல்லவா நினைத்திருந்தேன். ஆனால் இதன்கீழ் இப்படியொரு உலகமா."
"ஆமாம் ருத்ரசீலா இதுவொரு தனி உலகம். மாயைகளால் நிரப்பெற்ற குளம். அதீத ஆசைகளால் மனித மனம் நிறைந்திருப்பதைப் போல இது மாயைகளால் நிரம்பியது. "

"தாயே எனது பூசைக்கு சப்த கன்னிகள் தேவைப்படுகிறார்கள். அவர்களை லிங்கப்பூசைக்கு ஆட்படுத்தி, அதன்பின்பே அந்த ஓலைச்சுவடியை படிக்க வேண்டும். இதன் சாத்தியப்படுத்த உதவுங்கள் தாயே."
"ருத்தரசீலா ஒன்றை மறந்துவிட்டாய். லிங்கப்பூசை செய்ய நீ இந்த இங்கிருக்க முடியாதல்லவா."
"ஆமாம் தாயே. அதற்கான தீர்வை நீங்கள் தான் தர வேண்டும். என்னுடைய இந்த வழிபாட்டு முறை சற்று கடினமாக இருந்தாலும், அதில் வெற்றி பெற வேண்டியமைக்காக நிறைய முயன்றுள்ளேன். "

"சரிதான் அப்பனே" என கூறிவிட்டு. "வராகி" என அழைத்தாள்.
தொப்பென ஒரு சத்தம். அடந்த கருமையான நிறத்தில் ஒரு பெண் மேலிருந்து நீந்தி கீழிறங்கினாள். அவளுடைய கருத்த நிறத்திலேயே ஆடை அணிந்திருந்தாள். கருமையும் ஓர் அழகல்லவா. அதுவும் கருமை ஆளை மயக்கும் அழகு. 

"வராகி.. ருத்ரசீலனுக்கு லிங்கப்பூசையை செய்து அவனுடைய பூசைக்கு உதவிகள் செய். நாளைய பூசையில் உனது சகோதரிகள் உடன்வருவார்கள். பூசை முடிந்ததும் நம்முடைய கன்னியாதர மண்டபத்திற்கு ருத்ரசீலனை அழைத்துவா. நான் அங்கே காத்திருக்கிறேன்."
"ருத்ரசீலா விடைபெறுகிறேன்" என்று கூறி ராஜமாதா வெட்ட வெளியில் நீந்தி வெளியேறினாள்.
"ருத்ரசீலா.. நான் கன்னியாவேன். அதிலும் நடுக்கன்னி. "
"வணக்கம் தாயே" என்று கரம் கூப்பினான்.
"நினைத்தைப் பெறுவாய்" என ஆசி வழங்கினாள்.

No comments:

Post a Comment