க1
கோயம்புத்தூரில் உள்ள வெள்ளியங்கிரி மலை.. அழகை கொள்ளையடித்து முழுவதுமாக தனக்குள் புதைத்துக் கொண்டிருந்த மலையது. கொல்லிமலை, சதுரகிரி போல சித்தர்களின் பூமி. ஆனால் மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமாகாமல் தன்னை அதே தொன்மையில் தக்கவைத்துக் கொண்டிருந்தது. வெள்ளியங்கிரி மலையின் கீழே ஒரு வடக்கே பிறந்த குரு தன்னுடைய ஆசிரமத்தினை அமைத்திருந்தார்.
"ரெங்கா.. குரு உன்னைக் கூப்புடறாரு" என்ற மொட்டையிட்ட ஒரு பெண்சீடர்களில் ஒருத்தி சொல்லிப்போனாள். ரெங்கன் மகாமுரடன். தன்னுடைய பெற்றோர்களால் அடக்கமுடியாமல் போக சிறுவயதிலேயே அவனை ஆசிரமத்தில் விட்டுவிட்டார்கள். அவனுக்கு குருகுலத்தில் பலவிதமான வேலைகள் இருந்தன. குறிப்பாக குருவிற்கு எதிராக கலகம் செய்கின்றவர்களை அடக்குவது பிரதான வேலை.

ரங்கன் குருவைப் பார்த்துவிட்டு வருவதற்கு நீண்ட நேரம் ஆகியிருந்தது. அதை கவனித்த அந்த மொட்டைப்பெண்..
"என்ன ரெங்கா குரு எங்ககிட்டையெல்லாம் ஒன்னு ரெண்டு வார்த்தைதான் பேசராரு. உன்கிட்ட மணிக்கணக்க பேசராரே என்ன விசயம்" என்றாள்.
"அதெல்லாம் சொல்லமுடியாது. சொல்லவும் கூடாது. நீ நான் என்ன செய்யறேன்னு மட்டும் கண்கணிக்காதே. இதுல நிறைய ஆபத்து இருக்கு"
"சும்மாதான் கேட்டேன். குருவுக்கு கிட்ட போட்டுக்கொடுத்துடாத."
"ம்.. நான் சொல்லமாட்டேன். ஆனா உனக்கு இதுல ஆர்வம் அதிகமாகிக்கிட்டே போகறதா தெரியுது. நீயே இந்த தோட்டங்களைப் பரிமறிக்கர இடத்துக்கு மாத்திப்போயிடு. இல்லாட்டி பல ஆபத்துகளை சந்திக்க வேண்டிக்கிடக்கும்."
"ரங்கா ரொம்ப பயமுறுத்தாதே. நாளைக்கு இங்க நான் இருக்கமாட்டேன். அம்மனி சமையல் டிபார்மெண்டுக்கு போறேன். வகை வகையாக சமைச்சு இங்க எல்லா உயிரையும் எடுக்கப்போறேன்."
"ஹா.. ஹா.. நல்லவேளை நான் தப்பிச்சேன்." என்று சிரித்தான்.
"எப்படி?"
"நான் இரண்டு முனு நாளைக்கு இங்க இருக்க மாட்டேன். "
"எங்கப்போறேன்னு என்கிட்ட சொல்லுவியா" என்றாள் ஏக்கமாக..
"ஹா.. ஹா.. போ மொட்டை… "
ரெங்கன் குருகுலத்திலிருந்து வெளியே வந்தான். அங்கிருந்து நடந்து ஒரு ஒத்தையடி பாதையில் சேர்ந்தான். அது கரடு முரடான பல பாதைகளுக்கு அழைத்துச் சென்று ஒரு நாட்டார் கோயிலில் சேர்த்தது.
அந்தக் கோயிலில் ஆறு அடி உயரத்தில் ஒரு பாறைக்கல் முளைத்திருந்தது. அதன் முன்பு ஒரு ஒற்றை சூலாயுதம் நடப்பட்டிருந்து. சற்று சாய்ந்த நிலையில் முளைத்திருந்த கல்லில் இரு கண்களும் யோனியைப் போன்ற பிளவும் இருந்தது. மற்றபடி அகல்விளக்குகளோ, கற்பூரங்களோ அந்த இடத்தில் ஏற்றியமைக்கான எந்த தடமும் இல்லை. ரெங்கன் வந்து சேர்ந்தாலும் அந்த ஆள் அரவமற்ற இடத்தில் எந்தவொரு பயமும் இன்றி நின்றிருந்தான். மெல்ல இரவுக்கான தூவல்கள் தொடங்கி கரும் இருட்டாக இருந்தது.

ரெங்கன் தன்னுடைய மனதுக்குள் சிவன்யா சிவன்யா சிவன்யா என்று சொல்லிக் கொண்டிருந்தான்.
ஊட்டியில் பனிகர் இன மக்கள் வாழ்வது போல வெள்ளியங்கிரி மலையில் வசிக்கும் ஆதி குடிகளின் பெயர் சிவம்மா. இவர்கள் தங்களை சிவனுடைய பெண் ரூபமான சிவம்மாவின் பிள்ளைகளாக கருதுகிறார்கள். அவர்களுக்கென தனிச்சட்டம். தனியான உலகம் என வாழுகிறவர்கள். சிவன்யா மக்கள் இன்னமும் தாய் வழி சமூகத்தினராக உள்ளனர். அங்கு பெண்ணே எல்லாவற்றுக்கும் பிரதானம். ஆண்களுக்கு அங்கு காவல்காக்கும் வேலைக் கூட கிடையாது.
***
மணி சத்தம் கேட்டது.
"தாயி வந்துட்டிங்களா" எனக் கேட்டான்.
"ம்.. டேய் கண்ண மூடிக்கோ" என்ற குரலில் அமானுஷ்யம் கலந்திருந்தது. ரெங்கன் அழுத்தமாக கண்களை மூடிக்கொண்டான். அவனுடைய மனது படபடத்தது.
"ரெங்கா,. உன் குருக்கிட்ட இதைக் கொடுத்ததுடு" ரெங்கன் கண்ணை மூடிக்கொண்டே கைகளை நீட்டினான். ஒரு ஓலைச்சுவடிக் கட்டு விழுந்தது.

"சரி தாயி"
"உனக்கும் உன் குருவுக்கும் சிவம்மாவோட துணை என்னைக்கு இருக்கும். ஆனா இந்த ஓலையை தப்பா உபயோகம் பண்ணுனா.. விளைவுகள் கடுமையா இருக்கும். இந்தக் கட்டை படிக்கிறதுக்கு முன்னாடி லிங்கப்பூஜையை செய்யனும். ஏழு கன்னிமாறோட நடக்கற பூசையில திருப்பி அடைஞ்சாதான் இந்த கட்டைப் படிக்க முடியும். நான் சொன்னதை மட்டும் மறந்துடாத.. லிங்கபூஜை அதுவும் ஏழு கன்னிமாறோட…"
"சரி தாயி. இந்தக் குறிப்பை கவனமா சொல்லிடறேன். தாயி.. இன்னொன்னு.."
"ம்.. எனக்கு தெரியும். உன்னோட மனசுக்குள்ள ஒரு கோரிக்கை இருக்கு. அது உன் பொஞ்சாதி பத்தினது. அதை நீ சத்தம் போட்டு இந்த சிவம்மாக்கிட்ட சொல்லிப்போ. எல்லாத்தையும் அவ பாத்துக்குவா,
சிவம்மா.. சிவம்மா.. சிவம்மா… "
இருட்டில் வந்த உருவம் அப்படியே மறைந்து போனது. சத்தங்கள் எல்லாம் நின்ற பின்பு கண்களைத் திறந்தான். தன்னுடைய மனைவிக்கு இருக்கும் மாதவிடாய் பிரட்சனையை கத்தி கூறினான். சிவம்மா.. என்னோட பொஞ்சாதிக்கு மாதவிலக்கு வந்தா. கொடுமையா இருக்கு தினம் தினம் செத்து பிழைக்குறா. வயித்து வலியா துடிதுடிச்சு மடியுறா. உன்னையே நம்பி வந்திருக்கேன். உன் குழந்தைக்கு நல்லது பண்ணும்மா. ரெங்கன் வேண்டிக்கொண்டு அங்கேயே நின்றான். வானம் விடியத் தொடங்கி பாதைகள் புலப்படத் தொடங்கின. ரெங்கன் மலையிலிருந்து கீழே இறங்கினான். வந்த பாதையை விட்டுவிட்டு வேறு பாதையில் தொடர்ந்தான்.
காலை குருவை சந்திக்க செல்லும் முன் மொட்டைப் பெண் எதிர்ப்பட்டாள்.
"என்ன ரெங்கா மூஞ்சியைப் பார்த்தா செம சோகமாக இருக்கிற மாதிரி இருக்கு. நேத்து உன் பொண்டாட்டிக்கு கூட எங்கே போறேன்னு சொல்லிட்டு போகலையா. அது யார் யார்க்கிட்டையோ கேட்டுக்கிட்டு இருந்தது. அப்புறம் நான் நீ குரு சொன்ன இடத்துக்குப் போயிருக்கேன்னு சொன்னேன். பிறகு அமைதியாயிட்டா.." என்றாள்.

"எல்லாம் சரியாதான் செஞ்சிருக்க.." என சொல்லிவிட்டு அவன் முன்னேற முயன்றபோது.
"வாவ்.. அது என்ன ஓலைக் கட்டு.!!"
"இதெல்லாம் தேவையில்லாத சந்தேகம். கம்முன்னு போயி சமைக்கிற வேலையைப் பாரு." என்று நடந்தான். மொட்டை பேண் ரங்கனை பார்த்துக் கொண்டிருந்தாள்.
***
ரெங்கன் குரு இருக்கும் இடத்திற்கு சென்றுவிட்டு திரும்பியிருந்தான். அவன் குருவை சந்தித்தபின்பு அங்கு ஒரு இளைஞன் வந்தான். அவன் வலது கை தோல்பட்டையில் ஒரு லிங்கவடிவம் இருந்தது. அது பார்ப்பதற்கு ஏறக்குறைய ஆண்குறியைப் போன்று தோற்றமளித்தது.
"வாடா.. மன்மதா. இனி நீ நினைச்சதெல்லாம் நடக்கும். இந்தா உன் இருபத்தியைந்து வருடத்துக்கு கிடைத்த பலன்."
ஓலைச்சுவடிக்கட்டை காட்டினார்.
"ஓம்.. ரீம்.. கரிம்.. சற்குருவே.. நமக.." என வணங்கினான்.
"எடுத்துக்கிட்டுப் போடா. இனி இங்கே இருக்காதே. இந்த கட்டைப் பிரிச்சு படிக்கறதுக்கு ஏழு கன்னிமார்களை வைச்சு லிங்க பூசை பண்ணனும். நாளைக்கு முழுநிலவுநாள் வருது. எல்லாத்தையும் தொடங்கிடு. ஆனா மறந்து போய் கூட அவரசப்பட்டு தவறான செயல்களுக்கு பயன்படுத்திடாத. "
"குருவே என் சாதனையை உங்களுக்குச் சமர்ப்பிக்கிறேன். வருகிறேன்." என் திரும்பினான்.
"ம்.. கன்னிமார்களுக்கு எங்க போவ..." என் குரு கேட்க மௌணமாக நின்றான்.
"போ நான் சொன்னேன்னு சொல்லி ஜல லிங்க பூசையில் இருக்கும் கன்னிகளை கூட்டிக்கிட்டு போ.. அவங்க சாதாரணமானவங்க இல்லை. உன் பூசைக்கு முழு பலனும் கிடைச்சு உலகம் நல்லதா இருக்கனும்.... கிளம்பு."
"போ நான் சொன்னேன்னு சொல்லி ஜல லிங்க பூசையில் இருக்கும் கன்னிகளை கூட்டிக்கிட்டு போ.. அவங்க சாதாரணமானவங்க இல்லை. உன் பூசைக்கு முழு பலனும் கிடைச்சு உலகம் நல்லதா இருக்கனும்.... கிளம்பு."
மன்மதன் கிளம்பினான்.
No comments:
Post a Comment